537. கி அ அ அனானியின் அமர்க்களமான அரசியல் தீர்க்க தரிசனம்!
சென்ற ( 2008 ) செப்டம்பர் மாதம் கி அ அ அனானி ஒரு மேட்டர் எழுதி அனுப்பி , அதை பதிவாக இட்டிருந்தேன்
இந்த முறை ஏன் விஜயகாந்தாக இருக்கக்கூடாது
எதேச்சையாக மீண்டும் அதைப் படித்துப் பார்த்த போது அவரது அரசியல் தீர்க்க தரிசனம் பிரமிக்க வைத்தது :) மேற்க்கூறிய பதிவிலிருந்து கி அ அ அனானியின் தொலை நோக்குப் பார்வை சார்ந்த கருத்துக்களை கீழே தந்திருக்கிறேன்
1 ) உதாரணமாக வரும் தேர்தலில் பமக திமுக உறவு என்பது நடவாத ஒரு விஷயம் .
2 ) அதே போல திமுகவும் காங்கிரஸுடனான தங்களது உறவுக்காக கம்யூனிஸ்டுகளை உதறத் தயாராகி விட்டனர்.
3 ) கம்யூனிஸ்டுகளைப் பொறுத்த வரை இந்தத் தேர்தலில் அவர்களுக்கு பெரியதாக எந்த சாய்ஸும் இல்லை. பாஜக இல்லாத அதிமுக கூட்டணி அல்லது ஒரு மூன்றாவது கூட்டணி என்பதில் இரண்டில் ஒன்றுதான் இவர்களது முடிவாக இருக்கமுடியும்
4 ) அதிமுகவைப் பொறுத்தவரை கம்யூனிஸ்டுகளா / பாஜகவா என்று வரும் போது அவர்கள் கம்யூனிஸ்டுகளைத்தான் தேர்ந்தெடுப்பர்.அதில்தான் அவர்களுக்கு ஆதாயம்.
5 ) மற்ற கட்சிகளைக் கணக்கில் கொண்டால் வைகோ அனேகமாக இந்த பாராளுமன்றத் தேர்தல் வரை அதிமுகா கூட்டணியில்தான் இருப்பார்
6 ) பமகவைப் பொறுத்த மட்டில் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டி என்ற தற்கொலை முடிவைத் தவிர அவர்களிடம் உள்ள ஒரே சாய்ஸ் அதிமுகவுடன் இணைந்து தேர்தலை சந்திப்பதுதான்.
தமிழ் வலைப்பதிவுகளில் பாராளுமன்றத் தேர்தலில் தமிழக கட்சிக் கூட்டணி குறித்து இவ்வளவு தெளிவாக யாரும் எழுதி நான் வாசித்ததாக ஞாபகமில்லை. அதனால்தான் சொல்கிறேன் வலையுலகின் தமிழக அரசியல் விமர்சன பிரும்மாக்களையெல்லாம் ஒரு அனானி சர்வசாதாரணமாகத் தூக்கிச் சாப்பிட்டுவிட்டார்.
அவரது தனித்திறமையை முன்னமே அறிந்ததால்தான் அவரது பதிவுகளை எனது வலைப்பதிவில் தொடர்ந்து பதிப்பித்து வருகிறேன் :)
எ அ பாலா
3 மறுமொழிகள்:
Test !!!!
கி. அனானி சரி. நீங்க ஏன் பாட்டாளி மக்கள் கட்சியை ஒரு மாத்திரை குறைவாவே நினைக்கறீங்க. அது பா.ம.க தானே.
போன தேர்தலுக்கு இந்த தேர்தல் வெளிப்படையான வளர்ச்சி கண்டிருக்கிற கட்சி பா.ம.க. தான் :)
ஸ்ரீதர் நாராயணன்,
கி.அ.அ.அ தமிழ்லயும், தமிழ் தட்டச்சுல்லயும் சற்று வீக் தான் ;-)
Post a Comment